கொரோனா வைரஸ் தமிழகத்திலும் வேகமாக பரவி வருகிறது. மருத்துவர்களும் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனிடையே கொரோனா வைரஸ் பாதிப்பில் இறந்த டாக்டர் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்து சிலர் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.
நடிகர் கார்த்தி டுவிட்டரில் கூறியிருப்பதாவது: ‘டாக்டர் சைமன் இறுதிச் சடங்குக்கு இடையூறு செய்தது தமிழ் சமூகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இனியும் இதுபோன்ற தவறு நிகழாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் சைமன் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அனைவரின் சார்பாக என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்’. இவ்வாறு கார்த்தி கூறியுள்ளார்.
டாக்டர் சைமன் அவர்களின் இறுதிச் சடங்கை இடையூறு செய்தது தமிழ்ச் சமூகத்திற்கே தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. இனியும் இதுபோன்ற தவறு நிகழாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும். திரு. சைமன் குடும்பத்தினரிடமும், நண்பர்களிடமும் அனைவரின் சார்பாக என் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக்கொள்கிறேன்! pic.twitter.com/BovGYTTzho
— Actor Karthi (@Karthi_Offl) April 20, 2020