நடிகர் இர்பான் கான் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்தவர். மேலும் பல ஹாலிவுட் திரைப்படங்களிலும் தோன்றியுள்ளார்.
கடந்த புதன்கிழமை அன்று நடிகர் இர்பான் கான் புற்றுநோயால் மரணமடைந்தார். இது பலரையும் மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில் நடிகர் இர்பான் கான் 4 பிரம்மாண்ட ஹாலிவுட் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பை நிராகரித்துள்ளார்.
இயக்குனர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் அடுத்து இயக்கவுள்ள திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. ஆனால் அந்த கதாபாத்திரம் தனக்கு செட் ஆகாத காரணத்தினால், அப்படத்தை நிராகரித்துள்ளார் இர்பான் கான்.
அதன்பின் இயக்குனர் ரைட்லி ஸ்காட் இயக்கிய தி மார்டின் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது, பிக்கு திரைப்படத்திற்காக அந்த வாய்ப்பை நிராகரித்துள்ளார்.
அதனை தொடர்ந்து பிரபல இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய இன்டர்ஸ்டெலர் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை, லஞ்ச் பாக்ஸ் திரைப்படத்திற்காக மறுத்துள்ளார்.
மேலும் 10 வருடங்களுக்கு முன் வெளியான பாடி அப் லைஸ் திரைப்படத்தில், பிரபல நடிகர் லியோனார்டோ டிகாப்ரியோ உடன் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது, அந்த திரைப்படத்தையும் சில காரணங்களுக்காக மறுத்துள்ளார் இர்பான் கான்.