கைதி படத்திற்கு பிறகு தளபதி விஜய்யை இயக்கும் வாய்ப்பு இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு கிடைத்தது. தற்போது மாஸ்டர் படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தில் உள்ளது. படமும் ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் கைதி படத்தினை ஹிந்தியில் ரீமேக் செய்யும் அறிவிப்பு அதிகாரபூர்வமாக நேற்று வெளிவந்துள்ளது.
அந்த படத்தையும் லோகேஷ் கனகராஜை இயக்கவைக்க முயற்சித்து வருவதாக தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார். ஹீரோ முடிவானதும் படத்தின் முதற்கட்ட பணிகள் துவங்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
Glad to be associated with @RelianceEnt for producing #Kaithi in Hindi ✌🏼 pic.twitter.com/hV5jIFbsnr
— S.R.Prabhu (@prabhu_sr) February 3, 2020