Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாஸ்டர் திரைப்படத்தில் இப்படி ஒரு காட்சி இடம் பெற்றுள்ளதா! உண்மையை போட்டுடைத்த நடிகை ஆண்ட்ரியா..

master

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் மாஸ்டர்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மாநகரம் மற்றும் கைதி உள்ளிட்ட திரைப்படங்களின் வெற்றிக்கு பின், இப்படத்தை இயக்கியுள்ளதால் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இம்மாதம் பிரம்மாண்டமாக வெளியாக இருந்த மாஸ்டர் திரைப்படம், கொரோனா காரணத்தினால் தள்ளி வைக்க பட்டுள்ளது. மேலும் ஊரடங்கு முடிந்த பின்னரே இப்படம் எப்போது வெளியாகும் என தெரியவரும்.

இந்நிலையில் மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் நடிகை ஆண்ட்ரியா, ஒரு பேட்டியில் மாஸ்டர் திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள காட்சி குறித்து பேசியுள்ளார்.

இது குறித்து கூறுகையில் “மாஸ்டர் திரைப்படத்தில் ஒரு சேசிங் சீன் இடம் பெற்றுள்ளது, அதில் நானும் விஜய் சார் கூட இருப்பேன். மேலும் அது படத்தில் மிக முக்கிய கட்சியாக இருக்கும்” என கூறியுள்ளார்.