தளபதி விஜய் நடிப்பில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பில் உள்ளது.
கொரொனாவால் இப்படத்தின் ரிலிஸ் தேதி தள்ளி சென்றுள்ளது, மாஸ்டர் இந்த தீபாவளி விருந்தாக திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் மாஸ்டர் படத்திற்கு ஸ்டெண்ட் சில்வா தான் சண்டைக்காட்சிகள் வடிவமைத்துள்ளார்.
இந்த படத்தில் மொத்தம் 6 சண்டைக்காட்சிகள் உள்ளதாகவும், அவை எல்லாம் செம்ம லெந்த் சீகுவன்ஸாக இருக்கும் என்றும் மாஸ்டர் சில்வா கூறியுள்ளார்.
இதன் மூலம் மாஸ்டர் படத்தில் அதிரடிக்கு பஞ்சம் இல்லை என்பது உறுதியாகியுள்ளது.