Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாஸ்டர் படத்தில் மாளவிகா கொடுக்கப்போகும் சர்ப்ரைஸ், முதன் முறையாக!

malavika mohanan

தளபதி விஜய் தமிழ் சினிமா கொண்டாடும் ஒரு நடிகர். இவர் நடிப்பில் பிகில் படம் பிரமாண்ட வசூல் சாதனை செய்தது.

இப்படம் விஜய்யின் திரைப்பயணத்தையே மாற்றி அமைத்துள்ளது வர்த்தக ரீதியில். இதனால் மாஸ்டரும் பெரிய வியாபாரம் ஆகியுள்ளது.

அதே நேரத்தில் கொரோனாவால் தற்போது பல படங்கள் ரிலிஸ் தள்ளிச்சென்றது. இதில் மாஸ்டரும் மாட்டிக்கொண்டுள்ளது.

ஆனால் மாஸ்டர் எப்போதும் வந்தாலும் கண்டிப்பாக வசூல் வேட்டை தான், அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை.

இந்நிலையில் இப்படத்தில் நடிகை மாளவிகா மோகனன் ஒரு முக்கியமான ரோலில் நடித்துள்ளார். இது அனைவரும் அறிந்ததே.

தற்போது விஷயம் அது இல்லை, மாளவிகா தன் சொந்த குரலில் தான் மாஸ்டர் படத்தில் டப்பிங் பேசவுள்ளாராம்.