லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து வெளிவர காத்திருக்கும் படம் மாஸ்டர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா மிக சிறப்பான முறையில் நடந்த முடிந்தது.
இதில் விஜய், விஜய் சேதுபதி மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் பேசியதை நம்மால் அளித்தவில் மறந்துவிட முடியாது.
மேலும் இப்படத்தின் ட்ரைலர் இம்மாதம் 22ஆம் வெளிவரும் என்று தகவல்கள் வெளியானது.
தற்போது விஜய்யின் அனைத்து ரசிகர்களும் காத்து கொண்டு இருக்கும் ஒரே விஷயம் படத்தின் ரிலீஸ் தான்.
ஆனால் பட குழுவினர் திட்டமிட்ட படி மாஸ்டர் திரைப்படம் வரும் ஏப்ரல் 9ஆம் தேதி வெளிவராது என்று சில தகவல்கள் வெளியானது.
இதற்கு காரணம் தற்போது திரையரங்குகள் எல்லாம் மார்ச் 31ஆம் தேதி வரை மூடப்பட்டுள்ளது என்பது தான்.
இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தில் விஜய்யின் பெயர் ‘ஜான் துரைராஜ்’ என தற்போது தெரியவந்துள்ளது.
