தளபதி விஜய் தற்போது தனது மாஸ்டர் படத்தின் டப்பிங் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். இப்படத்தில் இவருக்கு வில்லனாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
இப்படத்தை இளம் இயக்குனரான லோகேஷ் கனகராஜ் இயக்கி வருவதை நாம் அறிவோம். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முறை நடிகை மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.
மேலும் இப்படத்தில் ஆண்ட்ரியா, சாந்தனு, ஸ்ரீமன், ஸ்ரீநாத், அருஜுன் தாஸ், சஞ்சீவ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.
இப்படத்தில் காலை இயக்குனராக பணிபுரிந்துள்ளவர் சதிஷ் என்பவர். இவர் இதற்கு முன் லோகேஷ் கனகராஜின் மாநகரம், கைதி உள்ளிட்ட படங்களில் காலை இயக்குனராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் “நான் விஜய் சாரின் மிக பெரிய ரசிகன். இப்படத்தில் அவருடன் இணைந்து பணிபுரிந்ததை என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன்”.
மேலும் பேசிய சதிஷ் “இப்படத்தில் Professor விஜய்யின் ஏன் நாம் படிக்கவில்லை என்று நினைப்போம். அந்த அளவிற்கு அந்த கதாபாத்திரம் இருக்கும், அதை நான் நேரில் பார்த்த அனுபவத்தில் சொல்கிறேன்” என்று வெளிப்படையாக கூறியுள்ளார்.