Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மாஸ்டர் மூலம் விஸ்வாசம் சாதனையை முறியடிப்பாரா விஜய்?

master and visawasam

மாஸ்டர் தளபதி விஜய் நடிப்பில் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ள படம். இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்து வருகின்றது.

ஏனெனில் விஜய் முதன் முறையாக சென்சேஷன் இயக்குனர் லோகேஷுடன் கைக்கோர்த்துள்ளது ஒரு காரணம் என்பதால்.

இந்நிலையில் மாஸ்டர் படத்தின் சிங்கிள் ட்ராக் ஏற்கனவே வெளிவந்து பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பி வருகின்றது.

அந்த சந்தோஷத்திற்கு மேலும் சந்தோஷம் கூட்டும் விதமாக மாஸ்டர் படத்தின் இசை வெளியீட்டு விழாவே அடுத்த வாரம் நடக்கவுள்ளதாம்.

இதற்காக ரசிகர்கள் பெரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர், மேலும், இந்த இசை வெளியீட்டு விழா ஒரு ஸ்டார் ஹோட்டலில் தான் நடக்கவுள்ளது.

இந்த நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் நேரலையாக வரவுள்ளது, இதனால், விஜய் ரசிகர்கள் இந்த முறை கண்டிப்பாக விஸ்வாசம் டிஆர்பி-யை முறியடிக்க வேண்டும் என்று முடிவு செய்திருப்பார்கள்.

தற்போது வரை விஸ்வாசம் தான் டிஆர்பி-யில் முதலிடத்தில் இருக்க, இதை மாஸ்டர் இசை வெளியீட்டு விழா முறியடிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.