Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மீண்டும் இணையும் காமெடி நடிகர்கள் வடிவேலு மற்றும் விவேக்கின் கூட்டணி? ட்விட்டரில் நடிகர் விவேக்

vadivelu and vivek

90களில் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களாக இருந்தவர்கள், நடிகர் வடிவேலு மற்றும் நடிகர் விவேக்.

இவர்களின் காமெடி கட்சிகளை நாம் தற்போது வரை ரசித்து வருகிறோம்.

ஆனால் சமீபகாலமாக இவர்கள் திரைப்படகளில் நடிப்பதை குறைத்துவிட்டனர். இருவரும் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே காண முடிந்தது.

மேலும், இவர்கள் இருவரும் முன்னணி காமெடி நடிகர்களாக இருந்தபோது, ஒரே திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

அப்படி இவர்கள் இருவரும் இணைந்து நடித்த திரைப்படத்தின் ஒரு காட்சியை பதிவிட்டு ரசிகர் ஒரு மீண்டும் நீங்கள் இருவரும் இணைந்து இப்போது படம் நடிப்பீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளித்த விவேக் ” உன்மையில் உங்கள் அன்பு என்னை நெகிழவைக்கிறது, நாங்கள் இருவரும் சீக்கிரமே இணைத்து நடிப்போம், என்னமோ பன்னி்டீங்க சார் என்ன” என கூறியுள்ளார்.