சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் “ஹீரோ”. இந்த படம் வெளியாவதற்கு முன்பே, இயக்குனர் அட்லீயின் உதவியாளரான போஸ்கோ இந்த ‘ஹீரோ’ திரைப்படத்தின் கதை அவருடையது என்று புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரை விசாரணை செய்த எழுத்தாளர் சங்கத் தலைவர் கே.பாக்யராஜ் இந்த திரைப்படத்தின் கதை ‘ஹீரோ’ படத்தின் கதையை ஒத்து இருப்பதால் இயக்குனர் பிஎஸ் மித்ரனை பேச்சுவார்த்தைக்கு அழைத்திருந்தார்.
ஆனால் பிஎஸ் மித்ரன் இந்த அழைப்பை நிராகரித்ததை தொடர்ந்து, நீதிமன்றத்தில் இதற்கு வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது. இந்த வழக்குக்கு நீதி வழங்கப்படுவதற்கு முன்பே ஹீரோ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிவிட்டது. தற்போது இந்த திரைப்படம் ஒரு முன்னணி தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டது.
ஆனால் இந்தப் படத்தின் தீர்ப்பு இயக்குனர் பிஎஸ் மித்ரனுக்கு எதிராக வந்துள்ளது. இந்த திரைப்படம் போஸ்கோ கதையை ஒத்து உள்ளது என்பது நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சாட்டிலைட் தொலைக்காட்சி மற்றும் ஓடிடி தளங்களில் இந்த படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து இப்படம் ஓடிடி தளத்தில் இருந்து நீக்கப்பட்டது.
இந்நிலையில் இப்படம் மீண்டும் ஓடிடி தளத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. அது குறித்த தகவலை டுவிட்டரில் வெளியிட்டுள்ள படத்தின் இயக்குனர் பிஎஸ் மித்ரன் கூடவே, “களவென்னும் காரறி வாண்மை அளவென்னும் ஆற்றல் புரிந்தார்கண்ட இல்,” என்ற திருக்குறளைப் பதிவிட்டுள்ளார்.
களவென்னும் காரறி வாண்மை அளவென்னும்
ஆற்றல் புரிந்தார்கண்ட இல்#Hero now Streaming in @PrimeVideoIN https://t.co/DDk5abFeAY— PS Mithran (@Psmithran) May 2, 2020