சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடித்துள்ள படம் ‘பட்டாஸ்’. இப்படத்தை எதிர் நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஜனவரி 16-ந் தேதி ரிலீசாக உள்ள நிலையில், பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
விவேக் மெர்வின் இசையில் ஏற்கனவே சில் புரோ மற்றும் முரட்டு தமிழன்டா ஆகிய பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது இப்படத்தின் 3-வது பாடல் கிறிஸ்துமஸ் தினத்தன்று வெளியிடப்பட உள்ளது. இப்பாடலை அனிருத் பாடியுள்ளார். நீண்ட இடைவேளைக்கு பின் தனுஷ் படத்தில் அனிருத் பாடியுள்ளதால், இப்பாடல் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Rockstar @anirudhofficial croons for #Pattas 💥@iamviveksiva – @MervinJSolomon
Musical #PattasThirdSingleOnDec25@dhanushkraja @durairsk @omdop @Lyricist_Vivek @actress_Sneha @Mehreenpirzada @Naveenc212 @AlwaysJani @LahariMusic pic.twitter.com/zQgJZObXJC— Sathya Jyothi Films (@SathyaJyothi_) December 23, 2019