இயக்குனர் ஏ.எல் விஜய் இயக்கத்தில் வெளிவந்த ‘இது என்ன மாயம்’ படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகியாக அறிமுகமாதோன்றியவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இதற்கு முன் மலையாள திரையுலகின் சூப்பர் ஸ்டார் மோகன்லாலுடன் கீதாஞ்சலி எனும் படத்தில் நடித்து ரசிகர்களிடம் தன்னை கதாநாயகியாக அறிமுகப்படுத்தி கொண்டார்.
மலையாளத்தில் சில படங்கள் நடித்து முடித்திவிட்ட பிறகு தமிழ் திரையுலகிற்கு திரும்பிய நடிகை கீர்த்திக்கு தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.
ஆம் விஜய், விக்ரம், சிவகார்த்திகேயன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து தனக்கென்று ஒரு தனி இடத்தை ரசிகர்கள் மனதில் சம்பாதித்தார்.
மேலும் இவர் நடித்து வெளிவந்த நடிகையர் திலகம் படம் இந்தியளவில் இவருக்கு மிக பெரிய உச்சத்தை தொட செய்தது.
இந்நிலையில் தற்போது தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டார் நடிகர் மகேஷ் பாபுவின் அடுத்த படத்தில் கீர்த்தி சுரேஷ் தான் கதாநாயகி என்று சில தகவல்கள் கசிந்துள்ளது.