இயக்குனர் முருகதாஸ் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்திருக்கும் தர்பார் படம் வரும் 2020 பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகவுள்ளது. இப்படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினி நடித்துள்ளார்.
அவருக்கு ஜோடியாக லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நடித்துள்ளார். அண்மையில் ரஜினியின் பிறந்த நாளான டிசம்பர் 12 ல் இப்படத்தின் டிரைலர் வெளியாகும் என மொத்த ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தார்கள்.
ஆனால் போஸ்டர் மட்டுமே வெளியானது. இன்று மும்பையில் இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா மாலை 6 மணியளவில் நடைபெறவுள்ளது. இதில் ரஜினிகாந்த், முருகதாஸ், சந்தோஷ் சிவன், அனிருத் என பலர் பங்கேற்கவுள்ளார்கள்.