டிவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் நடிகர், நடிகைகள் பிசியாக ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் சில நட்சத்திரங்கள் யூடியூப் சேனல் கூட துவக்கி விடுகிறார்கள். தமிழ் பட இயக்குனர்கள் பலரும் இதுபோல் சேனல் துவக்கி இருக்கிறார்கள்.
நடிகைகளில் பெரும்பாலானோர் இதுபோல் யூடியூப் சேனல் துவக்கியதில்லை. முதல் முறையாக ஹன்சிகா தனக்கென யூடியூப் சேனலை துவக்கியுள்ளார். இது பற்றி ஹன்சிகா கூறும் போது, மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். அதே சமயம் படபடப்பாகவும் இருக்கிறது. முதல்முறையாக என்னுடைய யூடியூப் சேனலை வெளியிடுகிறேன்.
என்னுடன் சேர்ந்து என்னுடைய வாழ்க்கைக்கு உள்ளே சென்று, என் உண்மையான பக்கத்தை அறிந்துகொள்ள தயாராக இருங்கள் என கூறியுள்ளார். தற்போது மகா படத்தில் ஹன்சிகா நடித்து வருகிறார். யூடியூப் சேனல் துவக்கி அவர் அதில் என்ன சொல்லப் போகிறார் என சில நடிகைகளும் ஆர்வமாக கவனித்து வருகின்றனர்.