Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

யோகி பாபு மீது கமிஷனர் அலுவலகத்தில் புகார்

yogi babu

பிரபல காமெடி நடிகர் யோகிபாபு மீது, இந்து மக்கள் முன்னணி என்ற அமைப்பு சார்பில் நேற்று சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்று கொடுக்கப்பட்டது. அந்த புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

தமிழ் சினிமாத்துறையில் சமீபகாலமாக இந்து கடவுள்களையும், இந்து மத உணர்வுகளையும் கொச்சைப்படுத்தும் விதமாக காட்சிகள் உள்ளன.

காமெடி நடிகர் யோகிபாபு நடித்துள்ள ஒரு படத்தில், அவர் முருகன் வேடத்தில் இருப்பது போன்ற காட்சி போஸ்டராக வெளியாகி உள்ளது. அதில் முருகனின் வாகனமான மயிலுக்குப்பதில், கிளியை போட்டு கிண்டல் செய்துள்ளனர்.

இது முருக பக்தர்களின் மனதை புண்பட வைத்துள்ளது. இதற்கு காரணமான நடிகர் யோகிபாபு மீதும், அந்த படத்தின் இயக்குனர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.