Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரகசியமாக, அவசரமாக திருமணம் நடைபெற்றது ஏன்?- முதன்முறையாக பேசிய யோகி பாபு

Yogi Babu

நடிகர் யோகி பாபு தமிழ் சினிமாவில் இப்போது முன்னணியில் இருக்கும் காமெடி நடிகர். புதுப்படங்களில் யார் இருக்கிறார்களோ இல்லையோ யோகி பாபு இருக்கிறார்.

அவரது காமெடிகள் தான் ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பு பெறுகின்றன. அஜித், விஜய் என முன்னணி நடிகர்களுடன் இணைந்து படங்கள் நடித்துவிட்டார்.

கடந்த பிப்ரவரி 5ம் தேதி அவரது குல தெய்வ கோவிலில் பார்கவி என்ற பெண்ணை அவசரமாக, ரகசியமாக திருமணம் செய்துகொண்டார்.

ஏன் இப்படி ரகசியமாக திருமணம் என்று யோகி பாபு முதன் முறையாக பேசியுள்ளார். அதில் அவர், முதலில் நான் அனைவரிடமும் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன், யாரையும் அழைக்க முடியவில்லை. எல்லோரையும் அழைத்து திருமணம் செய்ய வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது.

தனது குடும்பத்தில் தவிர்க்க முடியாத காரணத்தால் தான் இப்படி அவசர திருமணம் நடந்தது என கூறியுள்ளார். கண்டிப்பாக மார்ச் மாதம் எல்லோரையும் அழைத்து வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவேன் என யோகி பாபு தெரிவித்துள்ளார்.