Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரசிகர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் அருண் விஜய்

arun vijay

வாரிசு நடிகராக அறிமுகமானாலும் சினிமாவில் தனது கடின உழைப்பால் முன்னேறியவர் அருண் விஜய். குற்றம் 23, தடம், செக்க சிவந்த வானம் உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களில் நடித்த அருண் விஜய், சமீபத்தில் மாபியா என்ற திரைப் படத்தில் மிகவும் ஸ்டைலான நடிகராக மாறியுள்ளார்.

தற்போது அருண்விஜய் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “நம் நிலை கண்டு கைகொட்டி சிரித்தவர்களை கைதட்டி பாராட்ட வைப்பதே வெற்றி… தன்னம்பிக்கையோடு உழைத்திடு! உயர்ந்திடு!” என்று கூறியுள்ளார்.

ஊரடங்கு நேரத்தில் தினந்தோறும், தன்னால் முடிந்த ஊக்கத்தை ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார். இவரின் ட்வீட்கள் ஊக்கத்துடனும் துடிப்புடனும் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

அருண்விஜய் இந்த ஆண்டு நிறைய படங்களை தன் கைவசம் வைத்துள்ளார். சினம், பாக்ஸர், அக்னி சிறகுகள் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாக உள்ளன.