Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ரசிகர்கள் திரிஷாவை மறந்துவிடுவார்கள் – சமந்தா

trisha and samantha

விஜய் சேதுபதி – திரிஷா நடித்த ’96’ படத்தின் தெலுங்கு ரீமேக்கான ‘ஜானு’வில் சர்வானந்தும், சமந்தாவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே திரிஷா நடிப்புடன் சமந்தாவை ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் சமந்தா கூறியதாவது: இதுவரை நான் நடித்த அனைத்து படங்களையும் விட சிறப்பான நடிப்பை இந்த படத்தில் கொடுத்திருக்கிறேன்.

முக்கியமாக திரிஷாவின் நடிப்பை நகலெடுக்க விரும்பாமல் எனது சாயலில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன். அதனால் அவரது நடிப்பில் இருந்து ஜானுவில் மாறுபட்ட சமந்தாவை பார்க்கலாம். 96 படத்தைப் பொறுத்தவரை திரிஷா சிறப்பாக நடித்திருந்தார். அதில் எந்த மாற்றமும் இல்லை.

ஆனபோதும் ஜானு படம் பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்கள், திரிஷாவை மறந்து விடுவார்கள். ஜானுவான சமந்தாவைத்தான் மனதில் கொள்வார்கள். அந்த அளவுக்கு சர்வானந்துடன் எனது கெமிஸ்ட்ரி பல அதிசயங்களை வெளிப்படுத்தியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.