ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தர்பார் படம் சென்னையில் மட்டும் 26 தியேட்டர்களில் 73 திரைகளில் 337 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. முதல் நாளில் மட்டும் சென்னையில் ரூ. 2.27 கோடி வரை வசூலித்துள்ளது. இப்படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகை குஷ்பு, தர்பார் படத்தை பார்த்துவிட்டு அதுபற்றி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது “ரஜினி காந்தம் போல நம்மை ஈர்க்கிறார். அவர் மீது தான் கண்கள் இருக்கிறது. அவர் மட்டும் தான் இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார் என்பதில் ஆச்சர்யமில்லை.
தர்பார் பொங்கல் ட்ரீட். முருகதாஸுக்கு நன்றி” என குஷ்பு டுவிட் செய்துள்ளார். ரஜினியின் அடுத்த படமான ’தலைவர்168’-ல் குஷ்பு நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
#Darbar its @rajinikanth all the way..tou just cannot take your eyes away from him..he pulls your attention like a magnet with his charm n style
.No wonder he is the only #SuperStar of #Indiancinema. It's a pongal treat.Enjoy it in the theatres. @ARMurugadoss thanks for the treat— KhushbuSundar ❤️ (@khushsundar) January 9, 2020