Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ராஜமவுலிக்கு சவால்விட்ட அர்ஜுன் ரெட்டி இயக்குனர்

Sandeep Reddy Vanga and ss rajamouli

கொரோனா ஊரடங்கால் சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் திரைப்பிரபலங்கள் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர். இந்த நேரத்தில் சமைப்பது, வீட்டு வேலை செய்வது என நேரத்தை செலவிடும் பிரபலங்கள் அதனை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவேற்றி வருகின்றனர்.

இந்நிலையில், தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி எனும் பிளாக்பஸ்டர் ஹிட் படத்தை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா டுவிட்டரில் புதிய சவால் ஒன்றை தொடங்கி உள்ளார். பிரபலங்கள் வீட்டு வேலை செய்வதை வீடியோவாக எடுத்து #BetheREALMAN எனும் ஹேஷ்டேக்கில் பதிவிடுமாறு அவர் கூறியுள்ளார்.

இந்தச் சவால் தொடர்பாகத் சந்தீப் ரெட்டி தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: “ஒரு ஆணால் வீட்டு வேலைகளைச் சிறப்பாக செய்ய முடியும். ஒரு உண்மையான ஆண் இதுபோன்ற தருணங்களில் தன்னுடைய மனைவியை தனியாக வேலை செய்யவிடமாட்டார். தயவுசெய்து வீட்டு வேலைகளுக்கு உதவுங்கள். #BetheREALMAN சவாலை ராஜமவுலி அவர்களும் செய்து ஒரு வீடியோ பதிவேற்றி பலரை ஊக்குவிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்”. இவ்வாறு சந்தீப் ரெட்டி வாங்கா தெரிவித்துள்ளார்.

இந்த சவாலை ஏற்ற ராஜமவுலி விரைவில் வீடியோவை பதிவிடுவதாக கூறியுள்ளார்.