ஆபாச படங்களில் நடித்து கொண்டிருந்த சன்னி லியோன் ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க வந்து கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். இந்தியில் தொடங்கி தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள் வரை நடித்துவிட்டார். இதுதவிர தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்கும் சன்னி லியோன், வெப் தொடரிலும் நடிக்கிறார். தற்போது கொரோனா ஊரடங்கால் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சன்னி லியோன், இந்த லாக்டவுன் காலத்தில் புது அவதாரம் எடுத்துள்ளார்.
அவர் ஓவியராக அவதாரம் எடுத்துள்ளார். தான் வரைந்த முதல் ஓவியத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள சன்னி லியோன், அந்த ஓவியத்திற்கு ‘உடைந்த கண்ணாடி’ என பெயர் வைத்துள்ளார். இந்த ஓவியத்தை வரைந்து முடிக்க 40 நாட்கள் எடுத்துக்கொண்டதாக சன்னி லியோன் அதில் குறிப்பிட்டுள்ளார். இவர் ‘வீரமாதேவி’ என்ற பெயரில் தமிழில் தயாராகும் சரித்திர படத்தில் கதாநாயகியாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
My lockdown piece of art.
It’s called “broken glass” sort of like our lives at the moment.
Everything might feel shattered, but every piece is meant to be next to each other to be made whole again. So if we can work together we also will feel whole again and come back together. pic.twitter.com/cbgKbOhHtw— sunnyleone (@SunnyLeone) April 26, 2020