தலதளபதி தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர்கள். இவர்கள் படங்களின் சாதனையை இவர்கள் படங்களே தான் மாறி மாறி உடைக்கும்.
அந்த வகையில் தற்போது ஒரு முன்னணி பாக்ஸ் ஆபிஸ் தளம் ஒரு ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது, இவை இந்தியாவில் அதிகம் வசூல் செய்த தமிழ் படங்கள் என்ற லிஸ்டை வெளியிட்டுள்ளது.
ஆனால், இவை எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை, ஏனெனில், பிகில் படம் இந்தியாவில் மட்டுமே ரூ 200 கோடி வசூல் செய்ததாக தகவல்கள் வெளிவந்தது.
இவர்கள் வெளியிட்டுள்ள இந்த வசூல் தகவல்படி விஸ்வாசம் படம் தான் நம்பர் 1 வசூல் என கூறப்பட்டுள்ளது.
இதில் விஸ்வாசம் ரூ 149 கோடி வரை இந்தியாவில் வசூல் செய்திருந்தது, பிகில் ரூ 145 கோடி என குறிப்பிட்டுள்ளனர், இந்த தகவல் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.
அதோடு பேட்ட ரூ 139 கோடி, நேர்கொண்ட பார்வை ரூ 102 கோடி, காஞ்சனா 3 ரூ 74 கோடி காப்பான் ரூ 69 கோடி முறையே வசூல் குறிப்பிட்டுள்ளனர்.
இதற்கு அடுத்தடுத்த இடங்களில் NGK , நம்ம வீட்டு பிள்ளை, கைதி, அசுரன் ஆகிய படங்கள் உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த பாக்ஸ் ஆபிஸ் வசூல் இவர்கள் எதன் அடிப்படையில் வெளியிட்டுள்ளார்கள் என்ற விவரம் தெரியவில்லை, ஆனால், மிக முக்கிய பாக்ஸ் ஆபிஸ் தளம் இவை என்று கூறப்படுகின்றது.
