Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வரலட்சுமியிடம் மன்னிப்பு கேட்ட சரத்குமார்

Varalakshmi and Sarathkumar

தமிழில் பல வெற்றி படங்களில் நடித்த சரத்குமார், தற்போது பொன்னியின் செல்வன், வானம் கொட்டட்டும், நா நா, ரெண்டாவது ஆட்டம், பிறந்தாள் பராசக்தி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

பிறந்தாள் பராசக்தி படத்தில் சரத்குமார், ராதிகா, மற்றும் மகள் வரலட்சுமி ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். இதுகுறித்து சரத்குமார் கூறும்போது, ‘கதையும், எங்கள் கேரக்டரும் சரியாக அமைந்ததால், ஒரே படத்தில் மூவரும் இணைந்து நடிக்கிறோம்’ என்றார்.

மேலும், போடா போடி படத்தில் நடித்த வரலட்சுமி, அந்த படம் பிரச்னையில் சிக்கி, ரிலீசாகும் வரை காத்திருந்தார். அந்த காலகட்டத்தில் ஒரு தந்தையாக என் மகளுக்கு நான் உதவி செய்து, பிரபல இயக்குனர்களின் படங்களில் அவரை நடிக்க வைத்திருக்க வேண்டும். அப்போது நான் அதை செய்யாமல் இருந்ததை நினைத்து இப்போது வருத்தப்படுகிறேன்.

இதற்காக என் மகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இன்று வரலட்சுமி தனியாகப் போராடி ஜெயித்திருக்கிறார்’ என்று கூறினார்.