தமிழ் சினிமா கடந்த இரண்டு நாட்களாக மிகவும் பரபரப்பாக இருந்தது. காரணம் பைனான்சியர், AGS நிறுவனம், நடிகர் விஜய் என மூவரின் வீடுகள், அலுவலகங்கள் என வருமான வரித்துறை சோதனை நடந்தது.
அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்ற அப்டேட்டுகளும் வெளியாக ரசிகர்களும் பரபரப்பாகவே இருந்தனர். இந்த நிலையில் விஜய் பக்கத்தில் இருந்து எந்த பிரச்சனையும் இல்லை என்ற தகவல் வர எல்லோரும் இப்போது செம ஹேப்பி.
இந்த நிலையில் எல்லா விஷயத்தையும் அமைதியாக கையாளும் விஜய் வருமான வரித்துறையினரை அமைதியாகவே சந்தித்துள்ளார்.
தன் பக்கம் எந்த பிரச்சனையும் இல்லாததால் இப்போது தனது மாஸ்டர் படப்பிடிப்பை நெய்வேலியில் தொடங்கியுள்ளார் விஜய். இந்த செய்தி ரசிகர்களுக்கு கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.