Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வளர்ப்பு தந்தையால் ஆபத்து – நடிகை விஜயலட்சுமி புகார்

kannada actress vijayalakshmi

பிரபல கன்னட நடிகை விஜயலட்சுமி. இவர் தற்போது துங்கபத்ரா என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆஞ்சநேயா டைரக்டு செய்கிறார். படப்பிடிப்பில் விஜயலட்சுமிக்கும் ஆஞ்சநேயாவுக்கும் காதல் மலர்ந்தது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர்.

இதற்கு விஜயலட்சுமியின் தாயும், வளர்ப்பு தந்தையும் சம்மதிக்கவில்லை. இதனால் வீட்டை விட்டு வெளியேறி இயக்குனர் ஆஞ்சநேயாவை திருமணம் செய்து கொண்டார். விஜயலட்சுமி புதிய படங்களில் நடிக்க சில தயாரிப்பாளர்களிடம் பணம் வாங்கிக்கொண்டு அவற்றில் நடிக்க மறுக்கிறார் என்று அவரது தாயும், வளர்ப்பு தந்தையும் போலீசில் புகார் அளித்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதையடுத்து விஜயலட்சுமி போலீசில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

“நான் வளர்ப்பு தந்தையால் கொடுமைகளுக்கு ஆளானேன். மனதளவிலும் சித்ரவதை செய்தார். இயக்குனர் ஆஞ்சநேயாவை நான் காதலித்தது வளர்ப்பு தந்தைக்கு பிடிக்கவில்லை. அதனால் வீட்டை விட்டு வெளியேறி அவரை திருமணம் செய்து கொண்டேன். இதனால் என்மீது பொய்யான புகார் அளித்துள்ளனர். என்னை யாரும் கடத்தவில்லை.

எனது கணவரை வளர்ப்பு தந்தை கொலை செய்ய சதி செய்தார். அதில் இருந்து கணவர் தப்பினார். எங்கள் இருவரது உயிருக்கும் அவரால் ஆபத்து உள்ளது. எனவே பாதுகாப்பு வழங்குங்கள்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.