நடிகர் விஜய் மற்றும் விஜய் சேதுபதி முதன்முறையாக இணைத்து நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர், இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளதால் ரசிகர்களிடையே மிக பெரிய எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
மேலும் மாநகரம் மற்றும் கைதி உள்ளிட்ட வெற்றி திரைப்படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.
மாஸ்டர் திரைப்படத்தின் படைகள் அனைத்தும் ரசிகர்களின் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, மேலும் வாத்தி கம்மிங் மற்றும் குட்டி ஸ்டோரி உள்ளிட்ட படைகள் பட்டிதொட்டி எங்கும் ஹிட் அடித்துள்ளது.
இந்நிலையில் வாத்தி கம்மிங் பாடலுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் டிக் டாக்கில் பேரபோர்ம் பண்ணிவரும் நிலையில், தற்போது அப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத்தும் வாத்தி கம்மிங் பாடலுக்கு தளபதி விஜய் போலவே நடனமாடி அசத்தியுள்ளார்.
அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் செம வைராகி வருகிறது. இதோ அந்த வீடியோ..
#VaathiComing Oththu 🔥✨
. @anirudhofficial #Master pic.twitter.com/LRFEYUXuuj— #VaathiComing (@VaathiComing) April 30, 2020