வீட்டில் அனைத்து நல்ல காரியங்களுக்கும் முன்னிலையில் இருக்கும் வாழை மரத்திற்கும் ஜோதிட மற்றும் வாஸ்து சாஸ்திரம் இருப்பதை கட்டாயம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டும்.
வாழை மரம்
வீட்டில் வாழை மரம் செல்வ செழிப்பினை ஏற்படுத்துவதுடன், மகிழ்ச்சி, முன்னேற்றம், நன்மை இவையனைத்தையும் கொடுக்கின்றது.
இவ்வாறு வீட்டின் நேர்மறை ஆற்றலுக்கு உறுதுணையாக இருக்கும் வாழைமரத்தினை, நடும் போது சரியான திசையில் வைக்க வேண்டும். நாம் அவ்வாறு சரியாக வைத்தால் வீட்டில் பிரச்சினைகள் நீங்கி மேற்கண்ட பலன்களை அடையலாம்.
மங்களகரமான மரமாக பார்க்கப்படும் வாழையினை வடகிழக்கு மூலையில் நட வேண்டும். அவ்வாறு முடியவில்லை என்றால் கிழக்கு பகுதியில் நடலாம். வீட்டின் முன்புறம் நடாமல், பின்புறம் நடவேண்டும் என்பதை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
வாழை மரத்தின் அருகில் துளசி செடியை நட்டு வளர்ப்பது மிகவும் விசேஷமாகும். இவ்வாறு இருப்பதால் வீட்டில் விஷ்ணு அருளை பெறலாம்.
மேலும் வாழை வைத்திருக்கும் இடத்தினை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பாத்திரம் கழுவும் தண்ணீர், குளிக்கும் தண்ணீரை வாழைக்கு பயன்படுத்தக்கூடாது. சுத்தமான தண்ணீரையே வாழைக்கு பயன்படுத்த வேண்டும்.
வியாழக்கிழமைகளில் வாழை மரத்திற்கு மஞ்சள் பூசி வழிபாடு நடத்தினால், மகிழ்ச்சி செல்வம் வீட்டில் நீடிக்கும்.
வாழை செடியை வீட்டின் தென்கிழக்கு திசையில் நடக்கூடாது. அதேபோன்று தெற்கு அல்லது மேற்கு திசையில் நடக்கூடாது.
வாழை மரத்திற்கு அருகில் முள் செடிகள், ரோஜா செடிகள் இவற்றினை வைப்பதை தவிர்க்கவும்.