பொதுவாக நாம் எதற்கு எடுத்தாலும் வாஸ்த்து பார்ப்பது வழக்கம். இந்த வழக்கத்தைப் பின்பற்றி தான் பலரும் பல வேலைகளை செய்வார்கள்.
அப்படி நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் துடைப்பத்தை வீட்டில் எங்கு வைக்க வேண்டும், எங்கு வைத்தால் செல்வம் செழிக்கும் என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
எங்கு வைக்கவேண்டும்:
துடைப்பம் என்பது லட்சுமி தேவியின் சின்னம் என வாஸ்து சாஸ்திரம் சொல்கிறது. இந்த துடைப்பம் வீட்டில் வறுமையை நீக்குவதாகவும் பார்க்கப்படுகிறது.
வாஸ்துப்படி துடைப்பமானது வீட்டின் தெற்கு அல்லது தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும். தப்பிப் தவறியும் வடக்கு திசையில் துடைப்பத்தை வைத்து விடாதீர்கள் இதனால் வாஸ்து தோஷம் ஏற்படும். துடைப்பமானது பார்ப்பவர்களின் கண்ணில் படாதபடி தான் வைக்க வேண்டும்.
மேலும் விளக்குமாறை தலைகீழாக வைக்கவே கூடாதாம். துடைப்பம் பயன்படுத்தாமல் இருக்கம் போது கிடைமட்டமாகத் தான் வைக்க வேண்டும் வேறு எப்படி வைத்தாலும் நீங்கள் உங்கள் செல்வத்தை இழக்க நேரிடும்.
சமைக்கும் இடத்திலும் அல்லது சாப்பிடும் இடத்திலும் துடைப்பத்தை வைக்க கூடாது மீறி வைத்தால் வீட்டில் இருக்கும் உணவும் உணவுப் பொருட்களும் குறையும் மேலும், ஆரோக்கியத்திலும் குறைப்பாடு ஏற்படும்.
இரவு நேரத்தில் துடைப்படத்தை வீட்டிற்கு வெளியே வைக்க கூடாது வீட்டின் பிரதான வாயிலுக்கு பக்கத்தில் தான் வைக்க வேண்டும்.