தமிழ் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களில் தனது கடின உழைப்பினால் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளார் விஜய்.
இவரை பற்றி பல பிரபலங்களும் தங்களது கருத்துக்களை நேர்காணலில் பதிவிடுவார்கள்.
அந்த வகையில் பிரபல நடிகர் ராதாரவி அவர்கள் அண்மையில் அளித்த பேட்டியில் நடந்த உரையாடலில்: தொகுப்பாளர் கேட்ட கேள்வி “நீங்கள் தற்போது பா.ஜ.க வில் இணைந்துளீர்கள் அப்போது உங்கள் கட்சியை சார்ந்த எச் ராஜா அவர்கள் விஜய்யை ஜோசப் விஜய் என்று தான் அழைக்கிறார்” என்று கேட்டதற்கு.
ராதாவி : விஜய் அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் passport- டில் ஜோசப் விஜய் என்று தானே இருக்கிறது அப்போது ஏன் அப்படி அழைக்க கூடாது என்று கூறினார்.
இதன்பின் தொகுப்பாளர் : மாஸ்டர் பட படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு நடக்க கூடாது என்று உங்களது பா.ஜ.க வினார் போராட்டம் நடத்தினார்கள்?
ராதாரவி : “விஜய்யின் இப்படத்தின் படப்பிடிப்பை நிறுத்த முயற்சி செய்தால் நான் தான் முதல் ஆளாக வந்த நிப்பேன். மேலும் இது அரசியல் கட்சியின் சுய லாபத்திற்காக நடத்த படும் செயல்” என்று வெளிப்படையாக கூறினார்.