Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய்யின் பிகில் படம் செய்த மாபெரும் சாதனை- தயாரிப்பாளரே வெளியிட்ட தகவல்

bigil movie

அட்லீ-விஜய் கூட்டணியில் இந்த வருட தீபாவளிக்கு வெளியான படம் தான் பிகில். இப்படம் வெளியாகி இன்றோடு 50வது நாளை எட்டிவிட்டது.

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பில் இருந்தே ரசிகர்கள் 50வது நாள் கொண்டாட்ட பிளான்களை போட ஆரம்பித்துவிட்டனர்.

இன்று சமூக வலைதளங்களில் பிகில் 50வது நாளையும் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். இந்த நிலையில் இப்பட தயாரிப்பாளர் அர்ச்சனா 50வது நாளுக்கு வெற்றியடைய வைத்து ரசிகர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

இந்த வருடத்தில் உலகம் முழுவதும் அதிகம் வசூலித்த தமிழ் படங்களில் விஜய்யின் பிகில் முதல் இடம் பிடித்துள்ளது, இதற்கு நன்றி என பதிவு செய்துள்ளார்.