Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய்யின் வெறித்தனம் படைத்த புதிய சாதனை

Bigil - Verithanam Video

தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் – அட்லீ கூட்டணியில் வெளியான படம் பிகில். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் பெண்கள் கால்பந்து விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்தது. இதில் விஜய் பயிற்சியாளராக நடித்திருந்தார்.

நயன்தாரா கதாநாயகியாகவும், கதிர், யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெரிப், இந்துஜா, வர்ஷா பொல்லம்மா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். தீபாவளிக்கு வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

இப்படத்தில் விஜய் பாடிய வெறித்தனம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. இப்பாடல் வெளியான 19 மணி நேரத்தில் 50 லட்ச பார்வையாளர்களையும் 7.35 லட்ச லைக்குகளையும் பெற்றுள்ளது. தற்போது 50 மில்லியன் பார்வையாளர்களை கொண்டு சாதனை படைத்துள்ளது. இதை விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.