Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய்யுடன் மீண்டும் இணையும் ஷங்கர்?

vijay and shankar

விஜய்-ஷங்கர் கூட்டணியில் 2012-ல் வெளியான நண்பன் படம் பெரிய வெற்றி பெற்றது. ஆனாலும் அது நேரடி தமிழ் படம் இல்லை. இந்தியில் அமீர்கான் நடித்து வசூல் அள்ளிய 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்காக உருவாக்கி இருந்தனர். இருவரும் புதிய படத்தில் மீண்டும் இணைய வேண்டும் என்று ரசிகர்கள் விரும்பினர். இதுவரை அது நடக்கவில்லை.

இந்த நிலையில் ஷங்கரிடம் மீண்டும் விஜய்யை வைத்து படம் இயக்குவீர்களா? என்று கேள்வி எழுப்பியபோது, நானும் விஜய்யும் தயார். நாங்கள் எப்போது வேண்டுமானாலும் புதிய படத்தில் இணைய தயாராக இருக்கிறோம் என்று கூறினார். ஷங்கரின் பதில் விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் விஜய்க்கான கதையை ஷங்கர் தயார் செய்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. கதையை விஜய்யிடம் சொல்லி ஒப்புதல் பெற்று விட்டதாகவும் கூறப்படுகிறது. விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு ஓரிரு மாதங்களில் நிறைவு பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஷங்கரும் கமல்ஹாசனின் இந்தியன்-2 படப்பிடிப்பில் தீவிரமாக இருக்கிறார். இருவரும் பட வேலைகளை முடித்து விட்டு புதிய படத்தில் இணைவது குறித்து முடிவு செய்து அறிவிப்பார்கள் என்று கூறப்படுகிறது.