விஜய் அடுத்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற படத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் விஜய் ஒரு பேராசிரியராக நடித்திருக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகன் நடித்துள்ளார். மேலும் இப்படத்தின் மூலம் முதன் முறையாக விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். இவர்களுடன் சாந்தனு, ஆண்ட்ரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் நிறைவடைந்த நிலையில் படம் வரும் ஏப்ரல் மாதம் திரைக்கு வரவுள்ளது. படப்பிடிப்பின் இறுதிநாளில் நெய்வேலியில் நடிகர் விஜய், மற்றும் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் மரம் நட்டு வைத்தனர். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இதற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர். இந்நிலையில், விஜய்யின் இந்த செயலுக்கு ஹாலிவுட் நடிகரும், இயக்குனருமான பில் டியூக் டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Congratulations….Saving Planet Earth !!!@actorvijay @Dir_Lokesh @XBFilmCreators
@anirudhofficial @Jagadishbliss@Lalit_SevenScr @7screenstudio@ActorSriman @BussyAnand https://t.co/lRLaPL3MH3— Bill Duke (@RealBillDuke) March 6, 2020