லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கொண்டிருக்கும் படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக முதன் முறையாக மாளவிகா மோகனன் நடித்து வருகிறார்.
இப்படமே இன்னும் முடிவடையாத நிலையில் விஜய்யின் அடுத்த படத்திற்கான அப்டேட்டை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கேட்க துவங்கி விட்டனர்.
மேலும் இதனை குறித்து பல இயக்குனர்களின் பெர்யகளும் அடிப்பட்டது. அண்மையில் கூட இப்படத்தை சுத்த கே பிரசாத் அவர்கள் இயக்கப்போவதாக சில தகவல்கள் வெளிவந்திருந்தது.
இந்நிலையில் பிரபல முன்னணி இயக்குனர் பார்த்திபன் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் “நண்பன் படத்தை என்னன தான் விஜய் முதலில் இயக்கு சொன்னார். பின்பு அழகிய தமிழ் மகன் படத்திற்கு என்னை எழுத சொன்னார். நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
இதனை தற்போது ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் தளபதி 65 படத்தை பார்த்திபன் தான் இயக்க போகிறார் என்று வைரலாகி வருகிறார்கள்.
Massக்கு MASTER-ஐ பிடிக்கும்
Masterக்கு இந்த நண்பனைப் பிடிக்கும்.('நண்பன்' படத்தை என்னையே முதலில் இயக்கச் சொன்னார்-'அழகியத் தமிழ் மகனுக்கு எழுதச் சொன்னார்)
நாளை இன்னும் அடுத்த லெவலில் நீங்கள் எதிர்பார்ப்பது நடக்கும்!— Radhakrishnan Parthiban (@rparthiepan) February 18, 2020