Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய் மீது கைது நடவடிக்கை வருமா? அதிர்ச்சியில் ரசிகர்கள், வெளிவந்த ரிப்போர்ட்

vijay it raid

விஜய் தமிழ் சினிமாவின் உச்சத்தில் இருக்கும் நடிகர். இவர் நடிப்பில் கடந்த வருடம் வந்த பிகில் படம் ரூ 300 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.

இந்நிலையில் நேற்று ஏஜிஎஸ் நிறுவனத்தில் ரெய்டு நடக்க, சுமார் ரூ 25 கோடி வரை பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

தற்போது இரண்டு நாட்களாக விஜய் அவருடைய வீட்டில் வைத்து வருமான வரித்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

ஏற்கனவே புலி சமயத்தில் விஜய் வரி ஏய்ப்பு செய்தது நிரூபணம் ஆனதாக பிரபல நியூஸ் சேனல் தெரிவித்துள்ளது.

அதோடு இரண்டாவது முறையும் நிரூபணம் ஆனால், கண்டிப்பாக கடுமையான தண்டனை கிடைக்கும்.

ஏன் கைது செய்ய கூட நடவடிக்கை எடுப்பார்கள் என்று அதே சேனலில் கூறியுள்ளனர். இது ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.