தளபதி விஜய், தல அஜித் தமிழ் சினிமாவில் மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்ட நடிகர்கள். இவர்கள் நடிப்பில் ஒரு படம் வருகின்றது என்றால் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு இருக்கும்.
அந்த வகையில் அஜித்தின் என்னை அறிந்தால் படத்தின் மூலம் மிகப்பெரிய இடத்தை பெற்றவர் அருண்விஜய். அப்படத்தை தொடர்ந்து இவர் நடித்த குற்றம் 23, செக்கச்சிவந்த வானம், தடம் ஆகிய அனைத்து படங்களும் ஹிட் தான்.
இந்நிலையில் இவரின் நடிப்பில் மாபியா படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் ப்ரோமோஷனில் அருண்விஜய் கந்துக்கொண்டார்.
அதில் தமிழ் சினிமா நடிகர்களை கிரிக்கெட் வீரர்களுடன் ஒப்பிட்டு சொல்லுங்கள் என கூற, விராட் கோஹ்லி விஜய், அஜித் தோனி, ரஜினி சச்சின், கமல் கங்குலி என குறிப்பிட்டுள்ளார்.