Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விவாகரத்துக்கு தனுஷ் தான் காரணமா? அமலா பால் கூறிய பதில்

dhanush and amala paul

அமலா பால்-ஏ.எல்.விஜய் காதலித்து திருமணம் செய்துகொண்டாலும் சில வருடங்களில் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். இதற்கு தனுஷ் தான் காரணம் என ஏ.எல்.விஜய்யின் அப்பா சில வாரங்கள் முன்பு குற்றம்சாட்டியிருந்தார்.

திருமணத்திற்கு பிறகு படத்தில் நடிக்காமல் இருந்த அமலா பாலை அம்மா கணக்கு படத்தில் நடிக்க வைத்தது தனுஷ் தான். அதன் பிறகு தான் பிரச்சனை வந்தது என அவர் கூறினார்.

இந்நிலையில் இதுபற்றி அமலா பால் ஒரு பேட்டியில் பேசியுள்ளார். “விவாகரத்து என்னுடைய சொந்த முடிவு. அதற்கு வேறு யாரும் பொறுப்பு இல்லை, காரணமும் இல்லை” என பதில் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி தற்போது காதலித்து வருபவருடன் இரண்டாம் திருமணம் பற்றிய அறிவிப்பை வெளியிடுவேன் என்றும் கூறியுள்ளார் அவர்.