தமிழ் சினிமாவில் பெரும் சர்ச்சைக்கு பேர் போன நடிகர் விஷால். ஏற்கனவே நடிகர் சங்கம் பிரச்சனை, தயாரிப்பாளர் சங்க பிரச்சனை என்று இவரை சுற்றி பல சர்ச்சைகள் இருக்கும்.
அதிலும் தேர்தலில் எல்லாம் இவர் நிற்பதாக கூறி வந்தார், சரி இது ஒரு புறம் இருந்தாலும் விஷால் மிஷ்கினுடன் சண்டைப்போட்டது தான் தற்போது செம்ம ஹைலேட்.
இந்நிலையில் விஷால் தன் நண்பர் ஆர்யாவுடன் இணைந்து அவன் இவன் படத்தில் நடித்திருந்தார். அதை தொடர்ந்து தற்போது மீண்டும் ஒரு படத்தில் இணைந்து நடிக்கவுள்ளார்.
இப்படத்தை அரிமா நம்பி, இருமுகன் இயக்குனர் ஆனந்த் ஷங்கர் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.