தமிழ் திரையுலகில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர்களின் பட்டியலில் கண்டிப்பாக திரு மிஷ்கின் அவர்களும் இடம் பெறுவார்.
இவர் எடுக்கும் ஒவ்வொரு படத்திலும் தனக்கென்று தனி பாணியை அமைத்து கொண்டு தான் இயக்குவார்.
சமீபத்தில் வெளிவந்த சைக்கோ படம் கூட மிக சிறந்த விமர்சனத்தையும் வரவேற்பையும் ரசிகர்கள் மத்தியில் பெற்றது.
மேலும் அண்மையில் இவருக்கும் நடிகர் விஷாலுக்கும் ஏற்பட்ட துப்பறிவாளன் 2 படத்தின் பிரச்சனை முழுவதுமாக வெளிவந்தது.
வெப் சீரிஸ் பிரஸ் மீட் ஒன்றில் நடிகர் விஷால் தன்னிடம் நடந்து கொண்ட விதத்தையும், என்னென்ன சங்கடங்களை விஷால் தனக்கு கொடுத்தார் என்றும் வெளிப்படையாக கூறினார்.
இந்நிலையில் இந்த பிரச்சைக்கு பிறகு தற்போது மூன்று தயாரிப்பாளர்களின் படங்களில் மிஸ்கின் கமிட்டாகியுள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த மூன்று படத்தில் முதல் படத்திற்கு ‘காவு’ என தலைப்பு திரு மிஸ்கின் வைத்துள்ளதாகவும் தெரிவந்துள்ளது.
மேலும் இந்த விஷயத்தை குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வரும் வரை நாம் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.