Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஸ்வாசம் பற்றி தவறாக பேசினால் நான் வருவேன், அதிரடியாக கூறிய விநியோகஸ்தர்

viswasam movie

விஸ்வாசம் தல அஜித் நடிப்பில் இந்த வருடம் வெளிவந்த படம். இப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது.

இதுவரை வெளிவந்த படங்களில் மிகப்பெரிய லாபத்தை கொடுத்த படங்களில் விஸ்வாசமும் ஒன்று, அப்படியிருக்க, சமீபத்தில் பிரபல தயாரிப்பாளர் ஒருவரிடம் விஸ்வாசம் விநியோகஸ்தர் ராஜேஸ் வாக்குவாதம் செய்தார்.

அதுக்குறித்து அவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது, அதில் அவர் ‘விஸ்வாசம் என்னுடைய படம்.

அந்த படம் மிகப்பெரிய வெற்றி, ஆனால், அதை பற்றி இன்னும் பேசுவது ஏன் என்று தெரியவில்லை, அதே சமயம் அது என் படம் என்பதால், அதற்காக நான் எப்போதும் பேசுவேன், யார் என்ன சொன்னாலும்’ என்று பதில் அளித்துள்ளார்.