Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

வீட்டில் இருக்கும் ஒவ்வொருவரும் சூப்பர் ஸ்டார் – நடிகர் அக்‌ஷய்குமார்

akshay kumar

கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பாதுகாக்க நடிகர் -நடிகைகள் சமூக வலைத்தளங்களில் விழிப்புணர்வு வீடியோக்களையும், கருத்துப் பதிவையும் வெளியிட்டு வருகிறார்கள். ஆனாலும் வெளியில் மக்கள் நடமாட்டம் இருப்பதாக பலரும் ஆதங்கப்படுகிறார்கள். இதனை பிரபல இந்தி நடிகர் அக்‌ஷய்குமார் ஏற்கனவே கடுமையாக சாடினார்.

“‘ஊரடங்கின் அர்த்தம் புரியாமல் சுற்றுகிறீர்களே, உங்களுக்கு அறிவு இல்லையா? நீங்களும், உங்கள் குடும்பமும் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டால் என்ன ஆகும்? என்று சிந்தியுங்கள். யாருமே உயிரோடு இருக்க முடியாது. படங்களில் நான் ஹெலிகாப்டர்களில் தொங்கி இருக்கிறேன். இன்று நமது வாழ்க்கையும் அதுமாதிரி அந்தரத்தில் தொங்குகிறது. முட்டாளாக வெளியே சுற்றாதீர்கள் என்று கண்டித்தார்.

தற்போது டுவிட்டரில் வெளியிட்டுள்ள இன்னொரு பதிவில், “இப்போதைய சூழ்நிலையில் வீட்டில் இருந்து தனது பாதுகாப்பையும், தனது குடும்பத்தினரின் பாதுகாப்பையும் உறுதி செய்பவரே சூப்பர் ஸ்டார். ஒவ்வொருவரும் இத்தகைய சூப்பர் ஸ்டாராக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.