கொரோனா ஊரடங்கில் நடிகர்-நடிகைகள் பலரும் வீட்டிலேயே உடற்பயிற்சிகள், யோகா செய்து தேகத்தை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இது சம்பந்தமான வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார்கள்.
நடிகை ரகுல்பிரீத் சிங்கும் உடற்பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். விதம் விதமாக உடற்பயிற்சிகள் செய்யும் புகைப்படங்களையும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வந்தார். இப்போது ஜிம்முக்கு செல்லும் நிலைமை இல்லாததால் வீட்டையே உடற்பயிற்சி கூடமாக மாற்றி இருக்கிறார்.
வீட்டில் இருக்கும் மரச்சாமான்கள் உதவியோடு உடற்பயிற்சிகள், யோகாசனங்கள் செய்கிறார். வீட்டுக்குள்ளேயே அந்தரத்தில் தொங்குவது, ஓடுவது, குதிப்பது என்றெல்லாம் உடற்பயிற்சிகள் செய்கிறார். ஊரடங்கு நமது ஆரோக்கியத்துக்கு தடையாக இருக்க கூடாது. கலோரிகளை கரைக்க ஜிம்முக்குதான் போக வேண்டும் என்ற அவசியம் இல்லை. வீட்டிலேயே எளிமையான உடற்பயிற்சிகளை செய்யலாம் என்றார்.