‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதிரடி சண்டை படமாக தயாராகும் இதில், அஜித்குமார் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. பைக் ரேஸ் மற்றும் கார் ரேஸ் காட்சிகளும் இப்படத்தில் இடம்பெறுகின்றன. இந்நிலையில் பைக் ரேஸ் காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளது. இதன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
வலிமை திரைப்படம் வருகிற தீபாவளிக்கு திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் ஹூமா குரேஷி, யாமி கவுதம், யோகி பாபு ஆகியோர் நடித்து வருகிறார்கள்.