ராஜமௌலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வெளியான படம் ‘பாகுபலி’. இரண்டு பாகங்களாக வெளியான இப்படத்தில் பிரபாஸ் ஹீரோவாகவும், ராணா வில்லனாகவும் நடிக்க, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
இந்த இரண்டு படங்களும் உலகமெங்கும் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. குறிப்பாக வசூலை வாரிக்குவித்து சாதனை படைத்தது. இப்படத்திற்கு பின் ராணாவும், பிரபாசும் இணைந்து நடிக்கவில்லை.
இந்நிலையில், அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேஜிஎப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் அடுத்ததாக இயக்கும் படம் சலார். பிரபாஸ் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் ராணா வில்லனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் மலையாள நடிகர் மோகன் லாலும் இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.