News

கொரோனா நிவாரண நிதி – கோடிக்கணக்கில் வாரி வழங்கிய பிரபாஸ்

இந்தியாவிலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு தீவிரமடைந்து வருகிறது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க நாடு முழுவதும் 21 நாட்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்று பிரபலங்கள் பலரும் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.

இதனால் பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனிடையே, தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்கள் பலரும் ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வரின் நிவாரண நிதிக்கு நிதியுதவி வழங்கி வருகிறார்கள். இதுவரை மகேஷ் பாபு, சிரஞ்சீவி, பவன் கல்யாண் ஆகியோர் தலா ரூ.1 கோடி, ராம்சரண் ரூ.70 லட்சம், நிதின் ரூ.20 லட்சம் என தொடங்கி பலரும் நிதியுதவி அளித்து வருகிறார்கள்.

இந்நிலையில் பாகுபலி நடிகர் பிரபாஸ் ரூ.4 கோடி நிதியுதவி வழங்கியுள்ளார். அதில் பிரதமர் நிவாரண நிதிக்கு ரூ.3 கோடியும், ஆந்திரா மற்றும் தெலங்கானா முதல்வர் நிவாரண நிதிக்கு தலா ரூ.50 லட்சமும் வழங்கி உள்ளார்.

Suresh

Recent Posts

ரோகினி போட்ட பிளான், முத்து எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் போலீஸ்…

8 mins ago