News

கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையமாகும் ஷாருக்கானின் அலுவலகம்

கொரோனா வைரஸ் நிவாரண பணிகளுக்கு நடிகர்-நடிகைகள் நிதி வழங்கி வருகிறார்கள். பிரதமரின் நிவாரண நிதிக்கும் பணம் கொடுக்கிறார்கள். இந்தி நடிகர் ஷாருக்கானும் நிவாரண நிதி திரட்டி வருகிறார்.

அறக்கட்டளை மூலம் பாதிக்கப்பட்டோருக்கு உதவும் பணியிலும் ஈடுபட்டு உள்ளார். அவர் கூறும்போது, “இந்த இக்கட்டான நேரத்தில் உங்களை சுற்றி இருப்பவர்கள், நாங்கள் தனியாக இல்லை என்பதை உணர வைக்க வேண்டியது முக்கியம். இந்தியர்கள் அனைவரும் ஒரே குடும்பம் என்பதை உறுதிப்படுத்துவோம்” என்றார்.

இந்த நிலையில் மும்பையில் தனக்கு சொந்தமாக உள்ள நான்கு மாடிகள் கொண்ட அலுவலகத்தை கொரோனா நோயாளிகளை தனிமைப்படுத்தும் மையமாக பயன்படுத்திக்கொள்வதற்கு வழங்குவதாக ஷாருக்கானும், அவரது மனைவி கவுரியும் அறிவித்து உள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பெண்கள், முதியோர்கள், குழந்தைகள் தங்கள் அலுவலகத்தை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று மும்பை மாநகராட்சிக்கு இருவரும் தெரிவித்து உள்ளனர். இதற்காக மும்பை மாகராட்சி ஷாருக்கானுக்கும், கவுரிக்கும் டுவிட்டரில் நன்றி தெரிவித்து உள்ளது.

Suresh

Recent Posts

ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த செஃப் வெங்கடேஷ் பட்,வைரலாகும் வீடியோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன்…

1 hour ago

செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

செவ்வாழைப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது வழக்கமான ஒன்று. அதிலும் குறிப்பாக…

7 hours ago