தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்துவருபவர் ஸ்ருதிஹாசன். இவர் தற்போது விஜய்சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் லாபம் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே முடங்கிக்கிடக்கும் ஸ்ருதி ஹாசன், அவ்வப்போது சமூக வலைத்தளங்கள் வாயிலாக ரசிகர்களுடன் கலந்துரையாடி வருகிறார்.
அந்தவகையில், அவர் தனக்கு மிகவும் பிடித்த வாசனைகள் குறித்து சமீபத்தில் பதிவிட்டிருந்தார். “ரோஸ், சாக்லேட், கேதுரு மரத்தின் வாசம், பென்சில் துகள்கள், சிகரெட் வாசனை – புகைக்க அல்ல, சாதாரணமாக அந்த புகையிலை வாசனை பிடிக்கும், குழந்தை பருவத்தில் அழிக்க பயன்படுத்திய ரப்பர் மற்றும் வெண்ணிலா ” ஆகிய வாசனைகள் தனக்கு மிகவும் பிடிக்கும் என ஸ்ருதி ஹாசன் தெரிவித்துள்ளார்.