Tamilstar
Movie Reviews

தவம் திரை விமர்சனம்

நடிப்பு – வசி, பூஜாஸ்ரீ, சீமான், ஆர்.விஜயானந்த், ஏ.ஆர்.சூரியன்,சிங்கம்புலி, போஸ் வெங்கட், சந்தானபாரதி,பிளாக்பாண்டி
மற்றும் பலர்

தயாரிப்பு – ஆசிப் பிலிம் இன்டர்நேஷனல்

இயக்கம் – ஆர்.விஜயானந்த் – ஏ.ஆர்.சூரியன்

இசை – ஸ்ரீகாந்த்தேவா

மக்கள் தொடர்பு – மணவை புவன்

வெளியான தேதி – 8 நவம்பர் 2019

ரேட்டிங் – 2.5/5

விவசாயத்தின் விவசாயிகளின் பெருமையைப் பற்றிச் சொல்ல வந்திருக்கும் மற்றுமொரு திரைப்படம் தான். ஆனால், விவசாயிகளின் பிரச்சினையை மேலோட்டமாகச் சொல்லிவிட்டு, அதைச் சுற்றி ஒரு காதல், பழி வாங்குதல் என கதை மேல் கதை வைத்து இழுத்துக் கொண்டே செல்கிறார்கள். நமது இரட்டை இயக்குனர்கள்

கதாநாயகி பூஜாஸ்ரீ
வேலை பார்க்கும் கம்பெனி முதலாளியின் மகள் திருமணத்திற்காக அன்னை வயல் என்கின்ற கிராமத்திற்குச் செல்கிறார் கதாநாயகி பூஜா ஸ்ரீ. அங்கு திருமணத்தை நடத்தி வைக்கும் ஏஜென்சி வேலை பார்க்கும் கதாநாயகன் வசி தான் இந்த திரைப்படத்தின் கதாநாயகன். சிறு வயதில் தான் பிறந்து வளர்ந்து ஓடித் திரிந்த கிராமம்தான் இந்த அன்னை வயல் தனது வாழ்ந்த ஊர் என்பதால்தான் கதாநாயகி பூஜாஸ்ரீ அங்கு செல்கிறார். அவருடன் சிறு வயதில் ஒன்றாக ஓடிப் பிடித்து விளையாடிய தோழன்தான் கதாநாயகன் வசி என்பதைத் தெரிந்ததும் இருவரும் காதலர்கள் மாறுகிறார்கள்.

ஊரில் நடக்கும் ஒரு கொலைக்கு சாட்சி சொல்ல முன் வருகிறார் கதாநாயகி பூஜாஸ்ரீ. அதனால், அந்தக் கொலையைச் செய்த வில்லன் கதாநாயகி பூஜாஸ்ரீயை கொலை செய்ய துடிக்கிறார். வில்லன் அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் இந்தத் தவம் திரைப்படத்தின் மீதி கதை.

அந்த ஊரில் வசிக்கும், கதாநாயகி பூஜாஸ்ரீக்கும் ஒரு பிளாஷ்பேக் இருக்கிறது. அந்த பிளாஷ் பேக்கில் கதாநாயகன் வசி தந்தையாக சீமான். ஊரில் இருக்கும் விவசாயிகளையும் விவசாய நிலங்களைக் காப்பாற்றத் பாடுபடுகிறார் வாத்தியார் சீமான்.

அதனால் எம்எல்ஏவிடம் நடக்கும் மோதலில் சீமான் கொல்லப்படுகிறார். ஆனால், நிலங்களைக் காப்பாற்ற உதவி செய்த சிறு வயது கதாநாயகி பூஜாஸ்ரீயை இவள் இருக்கும் வரை நீதான் இவளை காப்பாற்ற வேண்டும் என சீமான் தனது மகனிடம் சத்தியம் செய்ய அதை இப்போதும் செய்து முடிக்கத் துடிக்கிறார் கதாநாயகன் வசி என இடைவேளைக்குப் பின்னும் கதை வேறு விதமாக நகர்கிறது.

அறிமுக கதாநாயகன் வசி, அறிமுக கதாநாயகி பூஜா ஸ்ரீ இருவரும் அவரவர் கதாபாத்திரங்களில் பொருத்தமாகவே இருக்கிறார்கள். முடிந்தவரையில் இயல்பாக நடிக்க முயன்றிருக்கிறார்கள். அதில் கதாநாயகன் வசியை ஓவர் டேக் செய்கிறார் பூஜாஸ்ரீ. அழகாகவும் இருக்கிறார், கிளாமர் காட்டவும் தயங்காமல் இருக்கிறார். அதனாலேயே அவருக்கு அடுத்தடுத்து பல பட வாய்ப்புகள் வரலாம்.

இந்த திரைப்படத்தின் இரட்டை இயக்குனர்களில் ஒருவரான ஆர்.விஜய்ஆனந்த் மெயின் வில்லனாகவும், நன்றாக நடித்து இருக்கிறார் மற்றொருவரான ஏ.ஆர் சூரியன், புலிகேசி என்ற நகைச்சுவைக் கதாபாத்திரத்திலும் அருமையாக நடித்திருக்கிறார்கள். தாங்களும் படத்தில் அதிகம் இருக்க வேண்டும் என அவர்களுக்கான காட்சிகளை அதிகமாகவே வைத்துக் கொண்டுள்ளார்கள்.

திரைப்படத்தில் மற்ற கதாபாத்திரங்கள் பட்டியலில் உள்ளவர்கள் படம் பார்க்கும் ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறார்கள். நகைச்சுவையையாவது சிரிக்கும்படி வைத்திருக்கலாம்.

ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருக்கிறார். படத்தில் அடிக்கடி பாடல்கள் வருகின்றன. அதில் ஒன்றிரண்டாவது ரசிக்கும்படி இருந்திருக்கலாம்.

சீமான் வரும் பிளாஷ்பேக் காட்சிகள், விவசாயப் பிரச்சினைகள் என அனைத்து காட்சிகளையும் மிகவும் நிறைவாக செய்திருக்கிறார்கள். அது போலவே மொத்த படத்தையும் கொடுத்திருந்தால் முழு மனதுடன் இந்த திரைப்படத்தையும்  ரசித்திருக்கலாம். இந்தத் திரைப்படம் ஓகேதான்

தவம் – தவம் பலிக்கவில்லை