Tamilstar
Spiritual

படுக்கை அறையில் மணி பிளான்ட் வைக்கலாமா? வாஸ்து சாஸ்திர குறிப்புகள்

மகிழ்ச்சியை உறுதிப்படுத்தவும் நல்ல ஆரோக்கியமான மன நிலையை பரப்பவும் வீடுகளில் தாவரங்களை வளர்ப்பார்கள். அதிலும் குறிப்பாக, மணி பிளான்ட் என்பது வாஸ்து சாஸ்திரப்படி வீடுகளுக்கு மிகவும் முக்கியமானதாகும்.

மணி பிளான்ட்டின் நன்மைகள்

  • கதிர்வீச்சை உறிஞ்சுகிறது.
  • காற்றை வடிகட்டுகிறது.
  • வீட்டிலுள்ள எதிர்மறை ஆற்றல்களை உறிஞ்சுகிறது.
  • வீட்டினுள் அமைதியை கொண்டு வருகிறது.
  • மன அழுத்தத்தைக் குறைத்து நல்ல நித்திரையை பெற்றுக்கொள்ள உதவுகிறது.
  • செல்வத்தைப் பெற்றுக் கொடுக்கிறது.

மணி பிளான்ட் வாஸ்து குறிப்புகள்

  • மணி பிளான்ட்டை வடக்கு திசையில் வைப்பது செல்வத்தையும் செழிப்பையும் கொடுக்கும்.
  • கிழக்கு திசையில் மணி பிளான்டை வைப்பது செல்வாக்கு மிக்கவர்களுடன் தொடர்புகளை வளர்த்துக்கொள்ள உதவுகிறது.
  • தெற்கு திசையில் மணி பிளான்டை வைப்பது நிதி நிலையை மேம்படுத்த உதவும்.
  • பணம், செல்வத்தை உறுதி செய்ய தென்கிழக்கு திசையில் வைப்பது சிறந்தது.
  • மேற்கு மற்றும் தென்மேற்கு திசையில் மணி பிளான்ட் வைப்பதை தவிர்க்க வேண்டும்.

படுக்கையறை வாஸ்துவில் மணி பிளான்ட்

  • கிழக்கு, தெற்கு, வடக்கு மற்றும் தென்கிழக்கு என்பன மணி பிளான்ட் வைப்பதற்கான சிறந்த திசைகள்.
  • இரவில் காபனீரொட்சைட் வாயுவை வெளியிடுவதால் படுக்கையிலிருந்து ஐந்து அடி தூரத்தில் செடியை வைக்க வேண்டும்.
  • ஏர் கண்டிஷனிங் உபகரணங்களை நீண்ட நேரம் பயன்படுத்தினால் செடியில் தேய்மானம் ஏற்படும்.
  • மணி பிளான்ட்டானது, மன நிலையை மேம்படுத்தவும், படைப்பாற்றலை அதிகரிக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும், உற்சாகத்தை வளர்க்கவும் முடியும்.
  • படுக்கையறையில் மணி பிளாண்ட்டை வைப்பது வீட்டில் நேர்மறையை அதிகரிக்கும்.